தமிழகத்தின் விஷ மூலம் – ஈரோட்டின் பரிசு

ரோடு மாவட்டம் – தமிழ்நாட்டின் நீராதாரங்களை கெடுக்கும் விஷ மூலம். ஈரோட்டில் உள்ள தோல், காகித, சாய ஆலைகள் மட்டுமல்லாது, திருப்பூரின் சாய கழிவுகளை தாங்கி வரும் நொய்யல்லையும் ஏந்தி காவிரியில் கலக்கிறது. இதனால் நேரடி பாதிப்பு திருப்பூர், ஈரோடு, கோவை, நாமக்கல் மற்றும் கரூர். ஒன்றும் செய்யாத நாமக்கல் மக்கள் ஈரோட்டு எல்லையை பகிர்ந்து கொண்ட பாவத்தால் அவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மட்டுமின்றி காவிரி பாயும் திருச்சி, சேலம், தஞ்சை மாவட்டங்களும், காவிரி கூட்டு குடிநீர் திட்டம் இருக்கும் நகரங்களும் நிலத்தடி நீரினை விஷமாக்கிகொண்டுள்ளன. சிறியதாக இருக்கும் நள்ளிபாளையம் மற்றும் எல்லப்பாளையம் ஓடைகள் போனஸ்.

நீர் சுத்திகரிப்பு கருவியை மக்கள் பெரிதும் நம்புகிறார்கள். ஆனால் அக்கருவி, ஒரு திரவத்தில் உள்ள தூசுகளை நீக்கி கிருமிகளை அளிக்கும் வேலையைத்தான் செய்கிறது. ஒரு கெமிக்கலை தண்ணீராக மாற்றாது. கெமிகளில் உள்ள தண்ணீரையும் பிரித்து தராது!

வரைபடத்தை பாருங்கள். ஈரோட்டை “ப” வடிவில் சூழ்ந்திருக்கும் ஆபத்தை; தென்கிழக்காக காவிரியும்,காளிங்கராயனும் & வடமேற்காக நொய்யல், பவானியும் பாய்வதை; காவிரியில் கெடுபிடியால் இப்போது பவானியை மாசுபடுத்தவும் துவங்கி உள்ளார்கள். தமிழ்நாட்டில் மக்கள் வாழ தகுதி இல்லாத மாவட்டமாக ஈரோடு மாறி வருகிறது. அடுத்த தலைமுறைக்கு கான்சர், சர்க்கரை, ஜீன் சிதைவு, மலட்டுத்தன்மை போன்றவை நிச்சயம். மிக்க நன்றி முதலாளிகளே..!

ஈரோட்டு மக்களே! உங்கள் குடும்பத்துக்கும் பச்சை குழந்தைகளுக்கும் சுத்தமான உணவும் நீரும் பாலும் தர இயலாத  போதும் வெள்ளை ஆடை உடுத்தும் பெரிய மனிதர்களே! விழித்துகொள்ளுங்கள்..!
                        -இணை செய்தியலாளர்  : சசிகுமார்