கடல் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது


 
வாகன உற்பத்தியை அதிகரிக்கும் நாடுகள் திருந்தும் நாள் எந்நாளோ? 'பசிபிக் பெருங்கடலின் தென்மேற்குப்பகுதியில்  நீர்மட்டம்அதிகரித்துவருவதால், ஆஸ்திரேலியாவின் தெற்குப் பகுதியும் அதையொட்டிய நாடுகளும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்' என்று குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு முடிவில் தெரியாவந்துள்ளது. உலக அளவில் கடல் நீர்மட்டம் 1880-ம் ஆண்டு முதல் ஆண்டுக்கு 1.5 மில்லி மீட்டர் அளவு உயர்ந்துதான் வருகிறது. ஆனால், ஆஸ்திரேலியாவின் டாஸ்மேனியா அருகில் 1900 முதல் 1950-ம் ஆண்டுக்குள் ஆண்டுக்கு 4.2 மில்லிமீட்டர் அளவுக்கு நீர்மட்டம் உயர்ந்தி ருப்பது கண்டறியப்பட்டுள்ளது. புவி வெப்பமாயமாகி வருவதால் துருவப் பிரதேசங்களில் மிகப்பெரிய பனிப்பாறைகள் உடைந்து உருகத் தொடங்கியிருப்பதை நேரிலேயே பார்க்க முடிகிறது. இதுதான் நீர்மட்டம் உயர காரணம் என்பதில் சந்தேகம் இல்லை. இது தொடர்ந்தால்... ஆஸ்திரேலியா மட்டுமல்ல உலகின் பல பாகங்களும் நீரில் மூழ்கும் என்பதில் சந்தேகமில்லை. புவியின் வெப்பம் அதிகரிக்க காரணமாக இருக்கும் மனிதர்களும், அதை தடுக்க தவறாமல் மேலும் மேலும் ரசாயன மற்றும் வாகன உற்பத்தியை அதிகரித்து வரும் அரசுகளும் திருந்தும்நாள் எந்நாளோ?
ஆஸ்திரேலியாவின் டாஸ்மேனியா அருகில் 1900 முதல் 1950-ம் ஆண்டுக்குள் ஆண்டுக்கு 4.2 மில்லிமீட்டர் அளவுக்கு நீர்மட்டம் உயர்ந்தி ருப்பது கண்டறியப்பட்டுள்ளது. புவி வெப்பமாயமாகி வருவதால் துருவப் பிரதேசங்களில் மிகப்பெரிய பனிப்பாறைகள் உடைந்து உருகத் தொடங்கியிருப்பதை நேரிலேயே பார்க்க முடிகிறது. இதுதான் நீர்மட்டம் உயர காரணம் என்பதில் சந்தேகம் இல்லை. இது தொடர்ந்தால்... ஆஸ்திரேலியா மட்டுமல்ல உலகின் பல பாகங்களும் நீரில் மூழ்கும் என்பதில் சந்தேகமில்லை. புவியின் வெப்பம் அதிகரிக்க காரணமாக இருக்கும் மனிதர்களும், அதை தடுக்க தவறாமல் மேலும் மேலும் ரசாயன மற்றும் வாகன உற்பத்தியை அதிகரித்து வரும் அரசுகளும் திருந்தும்நாள் எந்நாளோ?