என்டோசல்பானுக்கு 2 ஆண்டு அனுமதி : நிபுணர் குழு பரிந்துரை

      பூச்சிக் கொல்லி மருந்தான என்டோசல்ஃபானை அடுத்த இரு ஆண்டுகளுக்கு பயன்படுத்துவதற்கு அனுமதி அளிக்கலாம் என உச்ச நீதிமன்றம் நியமித்த நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது.
தற்போதிருக்கும் இருப்பை காலி செய்வதற்காக இந்த அவகாசம் அளிக்கப்பட வேண்டும் என்று அந்தக் குழு அளித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. என்டோ சல்பானை பயன்படுத்துவதால், பல்வேறு வகையான உடல் கோளாறுகள் வருவதாகவும், நிபுணர் குழு கூறியிருக்கிறது.
இந்திய மருத்துவ ஆய்வுக் கழக விஞ்ஞானி ஆர்.எஸ். தலிவால் தலைமையிலான இந்தக் குழுவின் அறிக்கை, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஸ்வதேந்தர் குமார் மற்றும் மதன் பி. லோகுர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் தாக்கல் செய்யப்பட்டது.  இந்த அறிக்கையை நீதிமன்றம் வரும் 29-ம் தேதி பரிசீலித்து இறுதி முடிவெடுக்கும்.
-P.V.உமாதேவி